மின் கட்டண சலுகை வர்த்தகர்கள், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பொருந்தும்

மின்சாரத்துறையில் இதுவரை கிடைக்காத பாரிய சலுகையை தற்சமயம் அரசாங்கம் மக்களுக்கு வழங்கியிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மின்சார சபைக்கு வழங்கிய எரிபொருள் நிவாரணம் காரணமாக, பெப்ரவரி மாத பட்டியலுக்கான தொகையை, மார்ச், ஏப்பிரல், மே மாதங்களிலும் அறவிடப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்காக அரசாங்கம் மின்சார சபைக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த சலுகைகள் வர்த்தகர்களுக்கும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Previous articleஐந்து கிரகங்களை வெற்றுக்கண்களால் பார்க்கும் அரிய வாய்ப்பு! உங்கள் அலாரத்தை சரி செய்யுங்கள்
Next articleகொரோனாவின் 2 ஆவது அலையை தடுப்பது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு