இலங்கையில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவானது

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டிய உனாலீய வேவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போதே சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர் இதயம் மற்றும் நீரிழிவு நோயாளி என தெரியவந்துள்ளது.

இந்த வாரம் குளியாப்பிட்டியவில் பதிவான இரண்டாவது கொரோனா வைரஸ்  தொற்று மரணம் இதுவாகும்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.

வீரகேசரி பத்திரிகை

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price