பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்களுக்காக 7452 பேர் போட்டி: முழுவிபரம் இதோ

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கைப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தப்  பாராளுமன்ற தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 7452 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 

இவர்களில் 3652 பேர் அரசியல் கட்சிகளின் சார்பாகவும் 3800 பேர் சுயேச்சைக்குழுக்களின் சார்பாகவும் போட்டியிடுகின்றனர். 225 ஆசனங்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்திற்கு இந்த 7452 வேட்பாளர்களில் இருந்து 196 பேரே மக்களினால் தெரிவு செய்யப்படவுள்ளனர். 

மிகுதி 29 ஆசனங்களுக்கு கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் பெற்றுக்கொள்ளும் வாக்கு விகிதாசாரத்திற்கு அமைவாக தேசியப் பட்டியல் ஊடாக உறுப்பினர்கள்  தெரிவு செய்யப்படவுள்ளனர்.இதேவேளை இம்முறை பாராளுமன்றத்திற்கு196 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக நாடு முழுவதிலுமிருந்து  2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கமைய 1,62,63,885 பேர் வாக்களிக்கத்  தகுதி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் எண்ணிக்கையும் அவற்றின் சார்பாக களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையும் மற்றும் அந்த மாவட்டங்களில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை  தொடர்பில்  பார்ப்போம் .

கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக  16 அரசியல் கட்சிகள்  , 26 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 924 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 1,709,209 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 18 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள்  , 18 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 693 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 1,785,964 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 10 ஆசனங்களுக்காக 11 அரசியல் கட்சிகள்  , 13 சுயேட்சைக் குழுக்களின் சார்பாக 312 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 972,319 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 12 ஆசனங்களுக்காக  17 அரசியல் கட்சிகள்  , 12 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 435 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 1,129,100 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள்  , 10 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 184 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 407,569 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 8 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள்  , 13 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 275 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 577,717 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

காலி  மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக  13 அரசியல் கட்சிகள்  , 13 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 312 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 867,709பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக  13 அரசியல் கட்சிகள்  , 7 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 200 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 559,587 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 11 அரசியல் கட்சிகள்  , 8 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக  190 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 493,192 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 19 அரசியல் கட்சிகள்  , 14 சுயேட்சைக்குழுக்களின்  சார்பாக  330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 571,848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வன்னி மாவட்டத்தில்  6 ஆசனங்களுக்காக  17 அரசியல் கட்சிகள்  , 28  சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 405 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 287,024 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக  16 அரசியல் கட்சிகள்  , 22 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 409,808 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 20 அரசியல் கட்சிகள்  , 34 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக  189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 513,979 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள்  , 14 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 288,868 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் 15 ஆசனங்களுக்காக  12 அரசியல் கட்சிகள்  , 10 சுயேட்சைக்குழுக்களின்  சார்பாக 396 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 1,348,787 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

புத்தளம்  மாவட்டத்தில் 8 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள்  , 19 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 614,370 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில்   9 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள்  , 10 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 264 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் .693,634 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

பொலனறுவை மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 11 அரசியல் கட்சிகள்  , 8 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக   152 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 331,109 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக  12 அரசியல் கட்சிகள்  , 12 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 288 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில்  668,166 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 10 அரசியல் கட்சிகள்  , 9 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 171 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 372,155 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இரத்தினப்புரி மாவட்டத்தில் 11 ஆசனங்களுக்காக  16 அரசியல் கட்சிகள்  , 6 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 877,582 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில்  9 ஆசனங்களுக்காக  12 அரசியல் கட்சிகள்  , 7 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 228 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.  இந்த மாவட்டத்தில் 684,189 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page

Free Visitor Counters