20 வது திருத்தத்தை கொண்டுவந்த காரணங்களில் ‘இரட்டைப் பிரஜாவுரிமையும்’ ஒன்று என்பதனை முஷர்ரப் MP கண்டுகொள்ள தவறியுள்ளார்.

“அவசர அவசரமாக 20 வது திருத்தத்தை கொண்டுவந்த காரணங்களில் ‘இரட்டைப் பிரஜாவுரிமையும்’ ஒன்று என்பதனை முஷர்ரப் MP கண்டுகொள்ள தவறியுள்ளார்.”

“20 ஆவது திருத்தச் சட்டமூலமானது, ஒரு குடும்பத்தின் அரசியலை மேலும் தக்கவைத்துக் கொள்வதற்கான வரைபே அன்றி வேறொன்றில்லை அதனால் இது நிராகரிக்கப்பட்டே இருந்திருக்க வேண்டும்.”

இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள் தனது ஏனை நாட்டு பிரஜாவுரிமையை நீக்கி விட்டு தேசிய பங்களிப்பை வழங்க முற்படுவதா? அல்லது ஒருவரின்/குடும்பத்தின் இரட்டை பிரஜாவுரிமைக்காக ஒரு நாட்டின் அரசியலமைப்பையே மாற்றுவதா?

இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான விடயத்திற்கூடாக இவ்விடயம் உறுதிப்படுத்தப்படுகிறது.

20 வது அரசியல் சீர்திருத்த சட்ட மூல முன்மொழிவானது JR கொண்டுவந்த ஜனாதிபதிக்கான அதிகாரங்களையும் பார்க்க மிகையான அதிகாரங்களுடன் அதிகூடிய எல்லையற்ற அதிகாரங்களை ஜனாதிபதிக்கு  வழங்க முற்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.(இவற்றை பிரிதொரு பதிவில் விரிவாக பார்க்கலாம்)

இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றவர்கள் பாராளுமன்றத்தில் தற்போது இல்லை என்பதால், 

  • இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்ததா?
  • இந்த நாட்டின் அரச கொள்கை வகுப்புத் திட்டங்களுக்கு  ஏதும் தடை விதித்திருந்ததா?
  • மக்கள் நலன் பாதிக்கப்பட்டிருந்ததா?
  • தேசியப் பிரச்சினைகள், சர்வதேச ஒத்துழைப்புகள் என்ற ரீதியில் ஏதும் பிரச்சினைகள் இருந்ததா? என்றால் எதுவுமே இல்லை.

இதற்கு மாறாக இரட்டை பிரஜாவுரிமை என்பது பல பாதகங்களையே எமது நாட்டுக்கு ஏற்படுத்தும்.

  • 1 மக்களுக்கு பொறுப்புக் கூறாத ஆட்சியாளர்கள் உருவாகுவார்கள்.
  • 2 தேசிய ரீதியிலான செயற்றிட்டங்கள் வினைத்திறனாக அமையாது.
  • 3 ஊழல் மோசடிகளை செய்து நாட்டை விட்டு ஓடுவதற்கு முயலுவார்கள்.
  • 4 தேசியப் பிரச்சினைகளில் சர்வதேச சூழ்ச்சிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதனால் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்ற சட்ட உருவாக்கமானது எவ்வித அடிப்படைகளும் அற்றதாகும். இதனால் ஒருவரின் அல்லது ஒரு குடும்பத்தின் இரட்டை பிரஜாவுரிமைக்காக ஒரு நாட்டின் அரசியலமைப்பயே திருத்தம் செய்வது ஜனநாயக விரோதமாகும்.

VIAMLM.சுஹைல்- மடவளநியூஸ்
Previous articleஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த பெற்றோர் : மூன்று தினங்கள் சடலங்களுடன் வாழ்ந்த இரண்டு குழந்தைகள்
Next articleஇன்றைய தங்க விலை (24-10-2020) சனிக்கிழமை