ஒரே நாளில் 309 கொரோனா நோயாளர்கள்!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 300 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.

நேற்றைய தினத்தில் இரு சந்தர்ப்பங்களில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 309 ஆகும்.

அதன்படி, நேற்றைய தினம் இறுதியாக 259 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் அவர்களில் பேலியகொடை மீன் சந்தையில் இருந்து 182 பேரும், தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 75 பேரும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக் 2816 ஆக அதிகரித்துள்ளது. Ada-Derana

Previous articleநாடு தொடர்பில் சிந்தித்தே 20 க்கு ஆதரவாக வாக்களித்தேன் – SJB டயானா கமகே
Next articleஹக்கீம் மற்றும் பதியுதீன் ஆகியோரை இடைநீக்கம் செய்ய SJP எம்.பி.க்கள் அழைப்பு விடுத்துள்ளனர்