கருவில் இருக்கும் குழந்தைகளை கொரோனா தாக்கும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்.

கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் உள்ள கருவில் வளரும் குழந்தையை கொரோனா தாக்குமென ஆய்வு ஒன்றில் உறுதியாகி உள்ளது. காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், வறட்டு இருமல் ஆகியவை இருந்தாலே கொரோனா வைரஸ் பரிசோதனை அவசியம் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது புதிய ஆறு அறிகுறிகள் இருந்தாலும் பரிசோதனை தேவை என்று சுகாதார அமைப்புக்கள் அறிவுறுத்துகின்றன. தலைவலி,வாந்தி, வயிற்றுப் போக்கு வந்தாலும் கொரோனா பரிசோதனை எடுப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகாதார அமைச்சு, சுகாதார அமைப்புக்கள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பிரிவு ஆகியன கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்த எச்சரிக்கைகளை அவ்வபோது மக்களுக்கு அறிவித்து வருகின்றன.

கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாக தற்போது மாறியுள்ளன. கொரோனா வைரஸ் மனிதனின் எந்ததெந்த உறுப்புகளை தாக்கும், எப்படி தாக்கும் என்பது பற்றி தினமும் ஒரு ஆய்வு முடிவு வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

இவ்வாறு வெளியாகும் ஆய்வு முடிவுகள் மக்களை குழப்புவதுடன் அதிர்ச்சி அடையவும் வைக்கிறது. இந்த நிலையில், கர்ப்பத்தில் இருக்கும் சிசுவையும் கொரோனா தாக்கும் வாய்ப்புகள் உள்ளதாக புதிய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது.

அந்த ஆய்வில், பெரும்பாலான வைரஸ்கள் நச்சுக்கொடி மூலம் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்கு சென்று கருவை பாதிக்கின்றன.

அதேபோல், கொரோனா வைரஸ் கர்ப்பிணி பெண்கள் மூலம் அவர்களின் கர்ப்பத்தில் உள்ள குழந்தையை பாதிப்பதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளன.

சமீபத்தில், இத்தாலியில் கொரோனா பாதித்த 31 கர்ப்பிணி பெண்கள் கடந்த மார்ச், ஏப்ரலில் குழந்தை பெற்றனர். இதில், அவர்களின் தொப்புள் கொடி ரத்தம், நஞ்சுக்கொடி, தாய்ப்பாலில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குழந்தைக்கு மட்டும் தொப்புள் கொடி ரத்தம், நஞ்சுக் கொடியில் வைரஸ் காணப்பட்டது. மற்றொரு குழந்தைக்கு எதிர்ப்பு ஆற்றல் இருந்ததால், வைரசால் நஞ்சுக்கொடியை கடந்து செல்ல முடியவில்ல.

Read:  மீண்டும் ரணில் !!

பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வில், கருவில் உள்ள குழந்தையை கொரோனா தாக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இதுவரை, கர்ப்பத்தின், கடைசி காலத்தில் வைரஸ் பாதித்த பெண்களிடம் தான் அதிகளவில் ஆய்வுகள் நடந்துள்ளன. அதனால், கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் கொரோனா பாதித்த பெண்களிடம் அதிக ஆய்வுகள் செய்ய வேண்டும் என குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCEவீரகேசரி பத்திரிகை