கொழும்பில் மேலும் ஒரு பொலிஸ் பிரிவில் ஊரடங்கு

கொழும்பில் மேலும் ஒரு பொலிஸ் பிரிவில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, கிராண்ட்பாஸ் மற்றும் புளூமெண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

SOURCEவீரகேசரி பத்திரிகை