முஸ்­லிம்­களின் கடை­க­ளுக்கு முன்­பாக தொங்­க­விட்டப்பட்ட பன்­றி­களின் தலை­கள்: காரணம் என்ன?

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் சேத­ம­டைந்த நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டி  புனித செபஸ்­தியார் தேவா­லயம் நேற்று  ஞாயிற்­றுக்­கி­ழமை காலை திறக்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில், கட்­டு­வாப்­பிட்­டி தேவா­ல­யத்­திற்கு அண்­மித்­த­தாக உள்ள மீரி­கமை பிர­தான வீதியில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான சில கடை­க­ளுக்கு முன்­பாக பன்­றி­களின் தலை­களை இனந்­தெ­ரி­யாத நபர்கள் தொங்­க­விட்­டுள்­ளனர். 

மீரி­கமை வீதி, மைமா­கொடை பகு­தியில் உள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான மூன்று கடை­களின் முன்­பாக இவ்­வாறு பன்­றி­களின் தலைகள் கட்டித் தொங்­க­வி­டப்­பட்­டி­ருந்­தன.

நேற்­று­முன்­தினம் சனிக்­கி­ழமை  இந்த பிர­தே­சத்தில் உள்ள முஸ்­லிம்­களின் கடை­க­ளுக்கு சென்ற இனந்­தெ­ரி­யாத குழு­வொன்று நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை  கட்­டு­வாப்­பிட்டி தேவா­லயம் மீண்டும் திறக்­கப்­ப­ட­வுள்­ளதால் கடை­களை மூட­வேண்டும் என்று கூறி அது­தொ­டர்­பாக கடிதம் ஒன்­றையும் கொடுத்துச் சென்­றுள்­ளனர்.

இந்­நி­லையில், நேற்றுக் காலை  கடை உரி­மை­யாளர் ஒரு­வ­ருக்கு அவரின் கடையின் முன்­பாக பன்றின் தலை தொங்­க­வி­டப்­பட்­டுள்­ள­தாக ஒருவர் தகவல் வழங்­கி­யுள்ளார். கடை உரி­மை­யா­ளர்கள் அதனை பார்க்கச் சென்­ற­போது மூன்று கடை­களின்  வாயில் கத­வு­களில் பன்­றி­களின் தலைகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளதை கண்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட தையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

https://www.virakesari.lk/article/60906

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page

Free Visitor Counters