கொரோனாவில் மேற்கு ஐரோப்பாவில் முதல் இடத்தை பிடித்துள்ள ஸ்பெயின்

ஸ்பெயினில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

 அதனையடுத்து மேற்கு ஐரோப்பாவில் ஒரு மில்லியன் கொரோனா வைரஸ் தொற்று பதிவான முதல் நாடாக ஸ்பெயின் மாறியுள்ளது.

இறுதி ஆறு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக பதிவானதையடுத்து இந்த உயர் ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை 16,973 புதிய தொற்றாளர்கள் பதிவாகியதையடுத்து  நாட்டில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 1,005,295 ஆக உயர்ந்துள்ளதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை, ஒரே நாளில் 30,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளனர், இது ஸ்பெயினில்  தொற்றுநோய்  தொடங்கியதிலிருந்து  பதிவான அதிகூடிய எண்ணிக்கையாகும். அத்துடன் அங்கு இதுவரை கொரேனா தொற்று காரணமாக 34,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நோய்த்தொற்றை குறைக்கும் முயற்சியில் மாட்ரிட் உள்ளிட்ட மிக மோசமாக பாதிப்புக்குள்ளான சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிப்பது குறித்து ஸ்பெயின் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதேவேளை, உலகில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 41,331,381 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,133,166 பேர் உயிரிழந்தும் 30,785,112 பேர் குணமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

SOURCEவீரகேசரி பத்திரிகை