மெனிக் சந்தைக்கு பூட்டு !

கொழும்பு மெனிக் சந்தை நாளை முதல் (22.10.2020) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படவுள்ளதாக மெனிக் சந்தை வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா பரவல் நெருக்கடியை கருத்தில் கொண்டு பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இவ் நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை காலை 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரை மெனிக் சந்தை  மூடப்படும்  என மெனிக் சந்தை வர்த்தகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price
SOURCEவீரகேசரி பத்திரிகை