கண்டி எசலபெரகராவை முன்னிட்டு பெரகரா செல்லும் வீதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள், காரியாலயங்கள், வீடுகளில் ஆட்பதிவு நடவடிக்கைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக நிலையங்களுக்கு வருகை தரும் பொலிஸார் அங்கு தொழில் புரியும் தொழிலாளர்களது வதிவிட விபரங்கள், அடையாள அட்டை விபரங்கள் போன்றவற்றை பதிவு செய்கின்றனர்.

கண்டி வரலாற்று புகழ்மிக்க தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரகரா தற்பொழுது நாட்டில் காணப்படும் அசாதாரண நிலமையினை கருத்திற்கொண்டு சுகாதாரத்தினை பேணுமுகமாக பொது மக்களின் பங்குபற்றுதலின்றி நடைபெறவுள்ளது. இவ்வருட பெரகராவினை ரூபவாஹினி தொலைக்காட்சி மூலம் 1பார்வையிடக் கூடியதாகஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி ஜூலை 20ஆம் திகதி காலை நான்கு தேவாலயங்களான விஷ்ணு , நாத்த, பத்தினி மற்றும் கதிரேஷன் தேவாலயங்களின் கப் நாட்டல் நிகழ்வுகள் நடைபெற்று ஜூலை 24 ஆம் திகதி வரை உள் வீதி பெரகராவும் ஜூலை 25 ஆம் திகதி முதல் ஜூலை 29 ஆம் திகதி வரை கும்பல் பெரகராவும்,

ஜூலை 30ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை சிறப்புமிக்க ரந்தோலி பெரகராவும் ஆகஸ்ட் 4ஆம் திகதி இறுதி பகல் பெரகராவும் நடைபெறும்.

வழமை போல நீர்வெட்டு கெட்டம்பேயில் நடைபெற்று பகல் பெரகராவுடன் அன்றைய தினம் பெரகரா நிறைவு செய்யப்படும்.

பெரகரா செல்லும் வீதிகள் பற்றிய விபரங்களை தலதா மாளிகை எப்பொழுதும் போல இம்முறையும் வெளியிட்டுள்ளது.

SOURCEதினக்குரல்
Previous articleவஸிம் தாஜூதீன் கொலை வழக்கு; சந்தேக நபரொருவர் உயிரிழப்பு
Next article2019 O/L மாணவர்களுக்கான அறிவித்தல்