வஸிம் தாஜூதீன் கொலை வழக்கு; சந்தேக நபரொருவர் உயிரிழப்பு

றக்பி வீரர் வஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர்களுள் ஒருவர் உயிரிழந்து விட்டதாக சட்டமா அதிபர் சார்பில் நேற்று நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பின் முன்னாள் நீதித்துறை வைத்திய அதிகாரியான ஆனந்த சமரசேகர, உயிரிழந்து விட்டதாக கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. அதேநேரம் அந்த வழக்குடன் சம்பந்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் உடல் நிலையும் மோசமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வஸிம் தாஜூதீனின் 2012 ஆம் ஆண்டில் கார் விபத்தொன்றில் உயிரழந்தார். விபத்து என்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தாலும், பின்னர் அது படுகொலை என்று வழக்குத் தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு
SOURCEவீரகேசரி பத்திரிகை