இன்று தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றம்

தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக கொழும்பு கோட்டை – கண்டிக்கிடையிலும், மருதானை மற்றும் வெளியத்தைக்கு இடையிலும் சேவையில் ஈடுபடும் நகரங்களுக்கிடையிலான ரயில் இன்று தொடக்கம் மீண்டும் அறிவிக்கும் வரையில் சேவையில் ஈடுப்படாது.

இதேபோன்று கல்கிசை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை தினத்திலும் மற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வணிக பிரிவு முகாமையாளர் பண்டார சந்திரசேன தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரையில் சேவையில் ஈடுபடும் கடுகதி ரயில் சேவை தினத்திலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் பொலன்னறுவைக்கு இடையில் சேவையில் ஈடுப்பட்ட புலத்திசி என்ற நகரங்களுக்கு இடையிலான ரயில் அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் அவுகண ரயில் நிலையம் வரையில் சேவையில் ஈடுப்படும். (அரசாங்க தகவல் திணைக்களம்)

SOURCEAda-Derana
Previous articleறிசாத்தை காட்டிக்கொடுத்தது யார்..? கைது செய்யப்பட்டது எப்படி..? (புதிய தகவல்கள் இதோ)
Next articleமாகந்துர மதுஷ் படுகொலை – பாரளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்