ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த அமெரிக்கா பயன்படுத்திய நவீன ஆயுதம் – புதிய தகவல்

ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்குஅமெரிக்கா   நவீன ரக ஆயுதமொன்றை பயன்படுத்தியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து வகையான வாகனங்களிலும் பொருத்தி பயன்படுத்தக்கூடிய அமெரிக்க கப்பல்களில் இருந்து  எதிரி விமானங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கூடிய மரைன் படையணியின் புதிய ஆளில்லா விமான எதிர்ப்பு ஆயுதத்தையே அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.

எல்எம்ஏடிஐஎஸ் என்ற ஆயுதமே அமெரிக்க கடற்படை கப்பலி;ற்கு அருகில் சென்ற ஈரானின் டிரோனை செயல் இழக்க செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக  இராணுவ இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்த மரைன் படைப்பிரிவின் விசேட படையணியொன்று இந்த வகை ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

2200 பேரை கொண்ட இந்த படையணி தற்போது அமெரிக்காவின் கடற்படை கப்பலான யுஎஸ் பொக்சரில் உள்ள விசேட படையணியொன்றுடன் இணைந்து செயற்படுகின்றது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வகை ஆயுதத்தை நிலத்திலே பயன்படுத்துவது வழமை எனினும் தற்போது பல கப்பல்களில் பொருத்தி அமெரிக்கா பரிசோதனை செய்கின்றது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஆயுதத்தினால் ராடார்கள் மற்றும் கமராக்களை பயன்படுத்தி வான்வெளியில் பறக்கும் விமானங்களை கண்காணிக்க முடியும் எதிரிவிமானங்களை தனியாக அடையாளம் காணும் திறனும் இந்த வகை ஆயுதங்களிற்கு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page