கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலை – 2 வயது குழந்தை மற்றும் தாயாருக்கு கொரோனா தொற்று.

 கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தை

மற்றும் அதன்  தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழந்தையின் தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் வைத்தியசாலை ஊழியர்கள் யாருக்கும் இதனூடாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்தியவசியமற்ற விதத்தில் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous articleசேவைகளை ஆரம்பித்த, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள செய்தி
Next articleசாரதி அனுமதிப்பத்திரங்கள் டிசம்பர் 31ஆம் திகதி செல்லுபடியாகும்.