பயங்கரம் ! ஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை

நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ,  நீர்கொழும்பு பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லரின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணைகளில்,  குறித்த குழந்தையை  பலையல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும், குழந்தையின் தாயின் கள்ளக் காதலனைக் கைது செய்துள்ள பொலிஸார், அது தொடர்பிலான உதவி ஒத்தாசை, தகவல் மறைப்பு தொடர்பில் குழந்தையின் தாயையும், பிரதான சந்தேக நபரின் சகோதரரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் பிரகாரம்,  நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் உள்ள பாலமொன்றிற்கு அருகில் கடந்த 13ஆம் திகதி குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். துஷ்பிரயோகம் செய்யும் போது குழந்தையின் தலையானது பாலத்தின் சுவர் அல்லது அங்கிருந்த பொருளொன்றில் மோதுண்டுள்ளதாக கருதப்படும் நிலையில், குழந்தை சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

 இந் நிலையில் குழந்தையின் சடலம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையும் பிரேதப் பரிசோதனையும்  நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போதே குறித்த பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, சம்பவம் தொடர்பில் குழந்தையின்  தாயுடன் கள்ளக் காதல் கொன்டிருந்த  22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பின்னர் தாயும், கள்ளக் காதலனின் சகோதரர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

Read:  மீண்டும் ரணில் !!
SOURCE(எம்.எப்.எம்.பஸீர்) வீரகேசரி