ரிஷாத்துக்கு அடைக்கலம் அளித்தமைக்காக தம்பதியினர் கைது

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டுக்காக தெஹிவளை எபனேசர் பிளேஸில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வைத்தியர் ஒருவரும் அவரது மனைவியுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள பொலிஸார் வட்டாரங்கள், அவர்கள் ரிஷாத் பதியூதீனின் நெருங்கிய நண்பர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் இன்று அதிகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார்.

இந் நிலையில் ரிஷாத் தெஹிவளைக்கு வருவதற்கு முன்னர், எம்.பி. பதியுதீன் தஞ்சம் கோரிய ஏனைய இடங்கள் குறித்த விவரங்களைப் பெற பொலிஸார் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price
VIAவீரகேசரி பத்திரிகை