சமூகத்திலிருந்த தோன்றும் கொரோனா கொத்தணிகளால் அதிக ஆபத்து – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

சமூகத்திலிருந்த தோன்றும் கொரோனா கொத்தணிகளால் சமூகமயமாக்கப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

சமூகத்திலிருந்த தோன்றும் கொரோனா கொத்தணிகளால் சமூகமயமாக்கப்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 நோயாளிகளின் மூலம் இதுவரை கண்டறியப்பட்டிருந்தாலும், கண்காணிக்கப்பட்டிருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் அந்த மூலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரண்டிக்ஸ் கொரோனா கொத்தணியின் தோற்றத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றுவதே மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, எதிர்காலத்தில் தனிமைப்படுத்தப்படக்கூடிய பகுதிகளில் நடமாட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleதிருமணத்தின் போது சுகாதார நடை முறைகளை பின்பற்ற தவறியதால், திருமண மண்டபத்துக்கு சீல் வைப்பு.
Next articleரிஷாத்துக்கு அடைக்கலம் அளித்தமைக்காக தம்பதியினர் கைது