பொலிஸ் அதிகாரியின் மகள்களுக்கு கொரோனா : 16 பொலிஸார் தனிமைப்படுத்தலில்!

கொழும்பு, வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆமர் வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரின் இரு மகள்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்த குறித்த பெலிஸ் அதிகாரியும் அவருடன் பணிபுரிந்த 16 பொலிஸாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமர்வீதி பொலிஸ் நிலையம் நேற்றைய தினம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டு வேறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார்.  

SOURCEவீரகேசரி பத்திரிகை
Previous articleசாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் திகதியிலிருந்து, மேலும் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.
Next articleஅனுராதபுரத்திற்கு யாத்திரை சென்ற 05 பிக்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி!