ரிஷாத் பதுர்தீன் வெளியில் வரும் திகதியை ஊடக சந்திப்பில் அறிவித்தார் சிரேஷ்ட சட்டத்தரணி N.M ஷஹீட்.

பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள்காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதுர்தீன் இம்மாதம் 20 ம் திகதியின் பின்னர் நிச்சயமாக வெளியில் வந்து விடுவார் என்று சிரேஷ்ட சட்டத்தரணியும் அக்கட்சியின் பிரதித் தலைவருமான என்.எம்.ஷஹீட் அவர்கள் தெரிவித்தார்.

இன்று மாலை கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பின் போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி என்.எம்.ஷஹீட் அவர்கள், சட்டமா அதிபர் பிழையான அடிப்படையில் மேற் கொண்ட ஒரு தீர்ப்பே இவ்வகையான ஒரு பிரச்சினை உருவாகுவதற்கான பிரதான காரணமாகும்.

சட்டமா அதிபர் இவ்வாறான ஒரு பிழையான தீர்ப்பை மேற்கொண்டது இது முதல் தடவையல்ல; இதற்கு முன்னர் ரவி கருணாநாயக்க மற்றும் குருணாககலை மாநகர மேயர் ஒருவரின் விடயத்திலும் இவ்வாறான பிழையான தீர்ப்புகளை மேற் கொண்டிருந்தார்.

அவ்விரு சந்தர்ப்பங்களிலும் சரியான நடவடிக்கைககள் மேற்கொள்ளப் பட்டு சட்டம் சுட்டிக்காட்டும் வகையில் தீர்ப்புகளை வழங்கி நீதிமன்றம் வழி காட்டியது. அவற்றிலிருந்து கூட இச்சட்டமா அதிபர் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்- ரிஷாத் பதுர்தீன் அவர்கள் அண்மையில் தலைமறைவாகும் வரையில் கூட குற்றத் தடுப்புப் பிரிவினர் எப்போதெல்லாம் விசாரணைகளுக்காக அழைத்தார்களோ அப்போதெல்லாம் விசாரணைகளுக்காகச் சென்று வந்தவர்.

ஒரு போதும் தலைமறைவாகி இருந்தவரல்ல. ஆனால், இம்முறை சட்டமா அதிபரின் பிழையான அணுகுமுறைகளே அவரைத் தலைமறைவுக்கு உட்படுத்தி இருக்கிறது. ரிஷாத் அவர்கள் சட்டமா அதிபரின் குறித்த தீர்ப்பிற்கெதிராய் விண்ணப்பித்துள்ள முறையீடானது வருகிற 20 ந் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.அதன் போது ரிஷாத் பதுர்தீன் அவர்கள் நீதிமன்றில் தோன்றுவார்.

Read:  பாகிஸ்தான் சம்பவம் - வெட்கமும் துக்கமும்

தற்போது அவருக்குக் கிடைக்கப் பெற்றிருக்கும் சட்ட ஆலோசனைகளுக்கு அமைவாகவே அவர் தலைமறைவை மேற் கொள்கிறார் என்றும் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.ஷஹீட் அவர்கள் தெரிவித்தார்.

இதன் போது அக்கட்சியின் பா.ம. உறுப்பினர் முஷர்ரப்,அமீரலி, ஹுனைஸ் பாருக்,முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் அக்கட்சியின் செயலாளர் அல்ஹாஜ் சுபைதீன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SOURCE(அன்சார்.எம்.ஷியாம்) மடவளநியூஸ்