கொரோனா பரவலை தடுக்க இரு பிரதான வைத்தியசாலைகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையும் மஹரமக புற்றுநோய் வைத்தியசாலையும் கொரோனா அச்சம் காரணமாக நோயாளர்களை பார்வையிட வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தியுள்ளது.

குறித்த இரு வைத்தியசாலைகளில் அனைத்து நோயாளி பராமரிப்பு சேவைகளுக்கும் திறந்திருந்தாலும், நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி. விஜேசூரிய,  நோயாளிகளை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் நோயாளியுடன் வழக்கம் போல் ஒரு மணி நேரம் செலவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேபோன்று மஹரகம புற்நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் வசந்த திசாநாயக்க, வைத்தியசாலை சிகிச்சை (கிளினிக்) சேவையை பெற்றுக்கொள்ள வரும் நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளைப் பார்வையிட ஒரு நாளைக்கு ஒரு பார்வையாளர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நோயாளிக்கு பொருட்கள் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Previous articleகுழப்பத்தை உருவாக்க விமல் முயற்சியா? பசிலினால் விரட்டப்படுவாரா?
Next articleரிஷாத் பதுர்தீன் வெளியில் வரும் திகதியை ஊடக சந்திப்பில் அறிவித்தார் சிரேஷ்ட சட்டத்தரணி N.M ஷஹீட்.