அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பதற்றமான சூழ்நிலை

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இடையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் அங்குலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர்கள் இருவர் இன்று காலை 5 மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் சிலரினால் ஜீப் ஒன்றில் அழைத்துச்செல்லப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தின் முன்னால் இன்று பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!