விமான நிலையம் ஊடாக வெளிச் செல்லும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையம் உட்பட நாட்டிலுள்ள ஏனைய விமான நிலயைங்களினூடாக வெளி நாடுகளுக்கு செல்லும் பயணிகள், அவர்கள் புறப்படுவதற்கு 72 மணிநேர காலப் பகுதிக்குள் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவானது நாளை மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று விமான நிலைய மற்றும் ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீரகேசரி பத்திரிகை