கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக இதுவரை 533 பேருக்கு கொரோனா பரவல்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பினை பேணிய சுமார் 533 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்களில், 444 பேர் கைதிகள் எனவும்,64 பேர் பயிற்றுநர்கள் உட்பட ஊழியர்கள் எனவும் 25 பேர் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன்  தொடர்பினை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி  லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகள் மற்றும் ஊழியர்கள்  மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர். பிரசோதனைகளின் அனைத்து அறிக்கைகளும்  பெறப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

“புனர்வாழ்வு நிலையத்திற்கு வருகை தந்த கைதிகளின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்ட  நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சிறிய குழுவினர் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை.

அறிக்கைகள் கிடைத்ததும், சோதனை செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டவர்களை தனிமைப்படுத்தலாமா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் ’என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் நேற்று (15) பதிவான 9 கொரோனா நோயாளிகளில் ஒருவர் காந்தக்காடு புனர்வாழ்வு மையத்தைச் சேர்ந்தவர், மீதமுள்ளவர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து தனிமைப்படுத்த்தல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளவர்கள்  என தெரிவித்துள்ளார்.

Read:  மீண்டும் ரணில் !!