கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் நபர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொழும்பு துறைமுகத்தின் Dock yard பகுதியில் பணியாற்றும் நபர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்காரணமாக  கொழும்பு துறைமுகத்தின் Dock yard பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதிக்குள் பிரவேசிப்தற்கும்  அங்கிருந்து வெளியேறுவதற்கும் அனுமதி மறுக்கபபட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில் கடந்த நாட்களில பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசோதனைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.