ரம்புக்கனை பகுதியில் பெண்ணுக்கு கொரோனா; கேகாலை மாவட்டத்தில் சில கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு !!

கேகாலை மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களுக்கு தற்காலிக பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஈரியகொல்ல, எம்புல்அம்பே, அலவத்த, பிங்ஹேன, பொரளுவ, கிரிவல்லாப்பிடிய ஆகிய 6 கிராமங்களுக்கே இவ்வாறு தற்காலிக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ரம்புக்கனை பகுதியில் பெண் ஒருவருக்கு கொவிட் – 19 தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

ரம்புக்கனை ஈரியகொல்ல பகுதியில் வசித்த ஒரு பெண் கலகெடிஹேன ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரிகின்றமை தெரியவந்துள்ளது. 

தொற்றுக்குள்ளான பெண்ணுடன் பலர் நெருங்கி பழகியுள்ள நிலையில் அவ்வாறானவர்களை அடையாளம் காணவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கேகாலை மாவட்டத்தில் இதுவரை 15 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 

மாவட்டத்தில் இதுவரை 636 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

எவ்வாறாயினும் சமூகத்திற்கிடையில் அவ்வப்போது பீ.சீ.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குமார விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page