அக்குரணை மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஹலீமின் வேண்டுகோள்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

நாட்டில் கொரோனா 2 ஆவது  அலை மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் இதை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.   நாட்டில் பல வைத்தியசாலைகளை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும் பரிசோதனைகளுக்காகவும் பயன்படுத்துகிறது.

அதனடிப்படையில் மத்திய மாகாணத்தில் பத்திற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஹாரிஸ்பதுவ தேர்தல் தொகுதியில் தித்தபஜ்ஜல வைத்தியசாலையும் அக்குரணை சியா வைத்தியசாலையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வைத்திய தேவைகளுக்காக இவ்வைத்தியசாலைகள் பயன்படுத்தவுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் ஊடாக தெரிந்துகொள்ள முடிந்தது.  மக்கள் செறிந்து வாழும் அக்குறணையிலுள்ள சியா வைத்தியசாலையை தெரிவு செய்ததற்கான காரணம், இங்கு அமைந்திருக்கும் கட்டடங்களை பிரிக்கும் வசதி காணப்படுகிறது. அத்துடன், நீண்டகாலமாக இவ் வைத்தியசாலையின் உள்நோயாளர் பிரிவில் மிகக் குறைந்த எண்ணிக்கையானோரே சிகிச்சை பெறுகின்றனர் என்ற தரவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், வெளிநோயாளர் பிரிவு எவ்வித தடங்களும் இல்லாமல் வழமை போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதி வெளி நோயாளிகள் சிகிச்சைக்காகவும் மேல் பகுதி கொரோனா சிகிச்சை முகமாகவும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகின்றது. அத்த கட்டடத்தை சுற்றியும் இராணுவத்தினர் கடமையில் அமர்த்தப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இம்முகாம் அமைக்கப்படுவதன் ஊடாக இங்கு கொரோனா பரவாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதார பணிப்பாளர் உறுதியளித்தார். வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பாதையை பயன்படுத்துவதற்கு பயமடையத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது. பல பகுதிகளிலும் இவ்வாறான சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்ட போது இப்பிரதேச மக்கள் இதனை பிரச்சினையாக பார்க்க கூடாது. தேசிய சுகாதார பாதுகாப்புக்கு அனைவரும் தம்மாலான பங்களிப்பை செய்ய வேண்டும். அக்குரணை பகுதியில் வாழும் நாங்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நான் கருதுகிறேன். 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம். நன்றி

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page