அவதானம்..! வத்தளையில் 23 கொரோனா தொற்றாளர்கள்

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை மொத்தம் 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வத்தளைக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

 இதன் காரணமாக வத்தளையில் அமைந்துள்ள 88 வீடுகளில் வசிப்பவர்களை தங்களது குடியிருப்புகளில் சுயமாக தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

போபிட்டிய, உஸ்வட்டகெட்டியாவ, கேரவலப்பிட்டிய, ஹெந்தலை, திக்கோவிட்ட மற்றும் வெலிசறை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். -வீரகேசரி பத்திரிகை-