துப்பாக்கி அனுமதி பத்திர புதுப்பிப்பு நடவடிக்கை இடைநிறுத்தம்

2021ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதி பத்திரம் மற்றும் தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்பொழுது காணப்படும் கொரோனா வைரஸ் நிலைமையை கருத்திற் கொண்டு துப்பாக்கி அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தரும் பொது மக்களின் வருகையை மட்டுப்படுத்தும் பொருட்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி அனுமதி பத்திரம் மற்றும் தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுக்கான அனுமதி பத்திரம் வழங்கல் மற்றும் புதுப்பித்தல்களுக்கான அனுமதி பாதுகாப்பு என்பன அமைச்சினால் மாத்திரம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி பத்திரிகை

Previous article500 மில்லியன் டொலர் சீன கடன் விவகாரம் :  ரணில் தலைமையில் கூடிய குழு எச்சரிக்கை
Next articleரிஷாத் பதியுதீனைக் கைது செய்ய வேண்டாம் என்று இங்கு நாம் குரல் கொடுக்க முடியாது.