ரிஷாத்தின் மனைவியிடம் அறிக்கை பதிவு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் மனைவியிடம் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள ரிஷாத்தின் வீட்டிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்றைய தினம் சுமார் ஒரு மணிநேரம் அறிக்கையை பதிவுசெய்துள்ளனர்.

கடந்த 2019 நவம்பர் 16 ஆம் திகதி நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடம்பெயர்ந்த  வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தமை ஊடாக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் ரிஷாத் பதியூதினுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் அவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் அவரது சட்டத்தரணியூடாக, தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி ரீட்  மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. (வீரகேசரி பத்திரிகை)