பரீட்சை சான்றிதழ்கள் Online மூலம் மாத்திரம் விநியோகம்

சுகாதார பாதுகாப்பு காரணமாக இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஒருநாள் மற்றும் பொதுவான சேவைக்கான கருமபீடம் மீள அறிவிக்கும் வரையில் 2020 ஜுலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சான்றிதழை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரருக்காக Online மூலமாக விண்ணப்பித்து 48 மணித்தியால காலப்பகுதிக்குள் சான்றிதழை வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் www.doenet.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் அல்லது 011 2784323 என்ற தொலைபேசியின் ஊடாக சான்றிதழ் ஆவண களஞ்சிய பிரிவுடன் தொடர்புகொண்டு அல்லது துரித தொலைபேசி இலக்கமான 1911 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Previous articleவீண் அச்சம் வேண்டாம்; சமூகப் பரவல் இல்லை – அஜித் ரோஹன
Next articleமுதலையிடம் சிக்குண்ட 3 வயது சிறுமி பரிதாபகரமாக பலி!