சப்ரகமுவ மாகாண வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

சப்ரகமுவ மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான உத்தரவு பத்திர விநியோகமானது ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண தலைமை செயலாளர் ரஞ்சனி ஜெயகொடி தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் வருமான உத்தரவு பத்திரங்களின் காலாவதிக்கு வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

வீரகேசரி பத்திரிகை

Read:  ஜும்மா தொழும் இடங்களில் மாற்றம் - ஜம்இய்துல் உலமா