கொரோனா தொற்றாளர் பயணித்த 6 பேருந்துகள் பற்றிய விபரம்

கொரோனா தொற்றாளர் பயணித்த ஆறு பேருந்துகள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது போக்குவரத்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ND 4890 கொழும்பு – மெதகம பேருந்து, ND 2350 மாகும்புர – காலி பேருந்து, ND 0549 கடவத்த – அம்பலாங்கொட பேருந்து, ND 6503 கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்து, ND 9788 எல்பிட்டிய – கொழும்பு பேருந்து மற்றும் NF 7515 காலி – கடவத்த பேருந்து போன்றவை இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதுசொகுசு பேருந்துகளினுள் பயணிகளை ஏற்றும் போது அவர்களுடைய உடல் வெப்பநிலையை பரிசோதிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

தந்போது பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page