குழந்தைகளுக்கு பம்பஸ் அணிவிப்பதால் பக்க விளைவுகள் ஏற்படுமா?

குழந்தைகளுக்கு டயாபர் (பம்பஸ்) அணிவிப்பதால் அவர்களுக்கு எதிர்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இன்றைய திகதியில் எம்முடைய பிள்ளைகளை வெளியில் எங்கேனும் அழைத்துச் செல்லும் பொழுது சுகாதார கேடு ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு டயாபர் (பம்பஸ்) அணிவித்து அழைத்துச் செல்வர். ஆனால் தற்போது தம்பதிகள் இருவரும் பணிக்கு சென்று விடுவதால் குழந்தைகளுக்கு  காலையிலேயே  டயபரை (பம்பஸ்) அணிவித்து விடுகிறார்கள். 

பிறகு மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய உடன் குழந்தைகளின் டயபரை மாற்றுகிறார்கள். பிறகு மீண்டும் இரவு நேரங்களில் டயபரை அணிவித்து உறங்க வைக்கிறார்கள். இப்படி குழந்தைகளுக்கு அதிக நேரம் டயபர்(பம்பஸ்) அணிவிப்பது மோசமான பக்க விளைவுகள் ஏற்படும் என்று அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. 

அதிலும் டயாபரில் (பம்பஸ்) கலக்கப்பட்டுள்ள ‘ ப்தாலெட்’  என்ற வேதிப்பொருள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு உடற்பருமன், தொற்றா நோய்களான நீரிழிவு நோய், குருதி அழுத்த பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சந்தையில் இருக்கும் டயபரில் இத்தகைய வேதிப்பொருள் கலப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் தெற்காசிய நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் டயபரில் இத்தகைய வேதிப்பொருள் கலக்கப்பட்டிருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

எனவே குழந்தைகளுக்கு அணிவிக்கும் டயபரை தவிர்க்க முடியாத காரணத்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அதிக நேரங்களில் பயன்படுத்தக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி. தொகுப்பு அனுஷா.

Check Also

உடலுறவு வேண்டாம்; செல்போனே போதும்

இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் …

You cannot copy content of this page