கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு

உள்ளாகியமை பி.சி.ஆர். பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் தாதிக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், அவர் எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகினார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், அவர் தற்போது களுத்துறை – நாகொடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடன் நெருங்கிய தொடர்புடைய 12 பேர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price