அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நிர்வாகத் தெரிவு இன்று

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நிர்வாகத் தெரிவு இன்று 13.07.2019 ம் திகதி தெஹிவளையில் நடைபெற உள்ளது.

அடுத்து வரும் மூன்று வருட காலத்திற்கான தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாக சபை ஒன்று தெரிவு செய்யப்பட உள்ளது.

தெரிவு முறை ஜம்இய்யாவின் யாப்புக்கு அமைய பின்வருவருமாறு நடைபெறும்.

பதவிக்காலம் நிறைவுபெறும் நிர்வாக சபை உறுப்பினர்களும் மற்றும் மத்திய சபை உறுப்பினர்களும் சேர்ந்து அவர்களுக்கு மத்தியில் நடத்தபபடும் இரகசிய வாக்கெடுப்பில் கூடிய விருப்பு வாக்குகளைப் பெறும் 25 பேர் புதிய நிர்வாக சபையினர்களாக தெரிவு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்படும் ரகசிய வாக்கெடுப்பில் ஆகக் கூடிய விருப்பு வாக்குகளைப் பெறக்கூடியவர் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இவ்வாறு இரகசிய வாக்கெடுப்பு மூலம் பொதுச்செயலாளரும் பொருளாளரும் தேர்ந்தெடுக்கப்படுவர். இத்தெரிவுகள் முற்றுப் பெற்றதும் நாடாள ரீதியில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் மேலும் எட்டு பேர்கள் நிர்வாக சபையில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

மத்திய சபை அங்கத்தவர்கள்
—————————————
நாட்டில் இருக்கும் 24 மாவட்டங்களுக்கும் 24 மாவட்டக் கிளைகள் உள்ளன. இக் கிளைகளில் பிரதான பதவிகள் வகிக்கும் மூவரும் மத்திய சபை அங்கத்தவர்களாக கருதப்படுவர். இதன் பிரகாரம் மத்திய சபை அங்கத்தவர்களின் எண்ணிக்கை 72 ஆகும்.

மாவட்ட கிளைகளில் பதவி தாங்குனர்களின் தெரிவு
——————————————————————
அங்கத்தவர்களுக்கு மத்தியில் நடத்தப்படும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தலைவர் செயலாளர் பொருளாளர் தெரிவுசெய்யப்படுவர்

மாவட்ட கிளைகளுக்கான அங்கத்தவர்கள் தெரிவு
——————————————————————
மாவட்டத்தில் இருக்கும் பிரதேச கிளைகளின் பிரதான பதவித்தாங்குனர்கள் (தலைவர், செயலாளர், பொருளாளர்) மத்தியில் நடத்தப்படும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மாவட்டக் கிளைக்கு அவசியமான அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

பிரதேச கிளைகளின் பதவி தாங்குனர்கள் தெரிவு
——————————————————————
குறித்த பிரதேசத்தில் வசிக்கும் ஜம்இய்யாவில் அங்கத்துவம் பெற்ற உலமாக்கள் ஒன்றிணைந்து இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அவர்களது பிரதேச கிளையின் நிர்வாக சபையைத் தெரிவு செய்வர். பின்பு நிர்வாக சபையினுள் நடத்தப்படும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பதவி தாங்குனர்கள் தெரிவு செய்யப்படுவர்.

அனைத்து தெளிவுகளும் தாய் ஜம்இய்யாவின் மேற்பார்வையின் கீழ் நேர்மையாக நடத்தப்படுவதுண்டு.
*ஜம்மியாவின் யாப்பில்* கூறப்பட்டுள்ள தெரிவு முறையின் பிரகாரம் ஒரு தூர கிராமத்தில் வசிக்கும் மௌலவி ஒருவர் கூட அவருக்கு ஆளுமையும் தகமையும் இருந்து அதன் அடிப்படையில் உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்குமாயின் ஜம்இய்யாவின் தலைவராக வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் உட்பட ஜம்இய்யாவின் நிர்வாக சபையில் அல்லது வேறு குழுக்களில் அங்கம் வகிக்கும் எவருக்கும் எவ்வித ஊதியமோ அல்லதுவரப்பிரசாதமோ வழங்கப்படுவதில்லை. தமது சொந்த செலவிலேயே தமக்குரிய கடைமைகளை நிறைவேற்ற வேண்டும்.

-மௌலவி எம். ஐ.கலீலுர் றஹீம் பலாஹி

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page

Free Visitor Counters