அக்குறணை பிரதேசசபை பிரிவுக்குள் கொரோனாவை நுழைய விடாதீர்கள்

அக்குறணை பிரதேசசபை பிரிவுக்குள் கொரோனாவை நுழைய விடாதீர்கள் பிரதேச சபை தலைவர் இஸ்திஹார்

இம்முறை ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று கடந்த காலங்களை போல் அக்குறணை பிரதேச சபைபிரிவுக்குள் பரவ விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நமது கட்டாயக் கடமை கொரோனாபரவ காரணியாக எவரும் எமது பிரதேசத்தில் இணங்காணப்பட்டால் அவர்களின் தகுதி தராதரம் பாராது அவர்களை உரிய இடங்களுக்கு ஒப்படைப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை தயங்காது எடுப்பதாக அக்குறணை பிரதேச சபை தலைவர் ஐ.எப் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சம்பந்தமாக அக்குறணை மற்றும் அலவத்ததுகொட நகரங்களின் உணவகங்களின் உரிமையாளர்கள் வர்த்தகர்கள் ஆகியோரை விழிப்பூட்டும் முக்கிய நிகழ்வுகள் அக்குறணை பிரதேச சபை மண்டபம் அக்குறணை பிர
தேச செயலக பிரதானமண்டபம் ஆகியவற்றில் இடம் பெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்வுகளின் போது பிரதேச சபைத்தலைவர் ஐ.எப் இஸ்திஹார் இமாதுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த கொரோனா சம்பவத்தின் போது ஒரு தனி நபர் கொரோனா தொற்றாளராக இணங்காணப்பட்டு எமது முழு அக்குறணை பிரதேசமே முடக்கப்பட்டு நாம் அனைவரும் வீட்டில் முடங்கி பட்ட அவஸ்தைகள் இன்றும் என் கண் முன்னே தெரிகின்றன.

எனவே அந்த நிலைமை மீண்டும் எமக்குள் உருவாகிடக் கூடாது என்பதே இவ்விழிப்புணர்வு கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
விசேடமாக உணவகங்களில் பொருட்களை வழங்கும் போது தயாரிக்கும் போது பொது சுகாதார விதி முறைகளை பேணிக்கொள்வதோடு உணவகங்களில் மற்றும் பேக்கரிகளில் பணிப்புரிவோர் முக கவசங்கள் அணிவதையும் கையுறை பாவிப்
பதையும் கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்.

Read:  Today Doctors - Akurana - இன்றைய வைத்தியர்கள்

ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் சுகாதார கேடுகள் ஏற்படாதவாறும் துர்நாற்றங்கள் ஏற்படாதவாறும் உங்கள் வர்த்தக நிலையங்களை பாதுகாத்துக் கொள்வது உங்களுடைய கடமை. இதற்கு மாறாக செயற்பட்டு இணங்காணப்பட்டால் அவர்களுக்கெதிராக தராதரம் பாராது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் தான் கண்டிப்பாக தெரிவிப்பதாகவும் ஐ.எப்
இஸ்திஹார் இமாதுதீன் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்கள் அக்குறணை சுகாதார அதிகாரிடாக்டர் சஞ்சீவ குருந்துகாமட அலவத்து கொட பொலிஸ் அதிகாரி ஏக்கநாயக்க உப பொலிஸ் உத்தியோகத்தர் சமரக்கோன் அக்குறணை பிரதேச செயலாளர் சாமித்தீ சுகாதார சேவை அதிகாரிகள் அக்குறணை வர்த்தக சங்கத்தலைவர் முகமட் ரீயாஸ் அலவத்துக்கொட வர்த்தக சங்கத்தலைவர் செனவிரத்தின ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Akurana SMS – Get the Latest Akurana news to your mobile via SMS **

**Daily-2+tax when your phone balance is available