அமுலுக்கு வரவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து சட்டம்

2019 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்கம் திருத்த சட்டத்துக்கு அமைவாக இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.

குறித்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விபரங்கள் வருமாறு :

01. 18 வயதினை அடைய முன்னர் எந்த ஒரு நபருக்கும் இலகு ரக வாகனம் (light vehicle) ஒன்றினை வீதியில் செலுத்த முடியாது. மேலும் 21 வயதினை அடைய முன்னர் எந்த ஒரு நபருக்கும் கன ரக வாகனம் (heavey vehicle) ஒன்றினை வீதியில் செலுத்த முடியாது.

02. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஒன்றினை முதல் தடவையாக செலுத்துவது 25 ஆயிரத்திற்கும் இற்கு குறையாததும் 30 ஆயிரத்திற்கு அதிகமாகத தண்டப்பணத்தை அறவிடக்கூடிய குற்றமாகும். இரண்டாவது தடவையாக அதே குற்றத்தினை செய்யும் போது 30 ஆயிரத்திற்கும் குறையாததும் 50 ஆயிரத்திற்கும் அதிகமாகாத தண்டப்பணம் அறவிடப்படும்.

03.குறிப்பிட்ட அளவை விட அதிக வேகமாக வாகனத்தினை செலுத்துதல்

(அ).குறிப்பிட்ட அளவைவிட 20 வீதம் அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் 3 ஆயிரம் ரூவாவிற்கு குறையாததும் 5 ஆயிரதம் ரூபாவிற்கும் அதிகமாகாத தண்டப்பணம் அறவிடப்படும்.

(ஆ) குறிப்பிட்ட அளவைவிட 20 வீதம் முதல் 30 வீதம் வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் 5 ஆயிரத்திற்கு குறையாததும் 10 ஆயிரத்திற்கு அதிகமாகாத தண்டப்பணம் அறவிடப்படும்.

(இ) குறிப்பிட்ட அளவைவிட 30 வீதம் முதல் 50 வீதம் வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 10 ஆயிரத்திற்கு  குறையாததும் ரூபா 15 ஆயிரத்திற்கு அதிகமாகாத தண்டப்பணம் அறவிடப்படும்.

(ஈ) குறிப்பிட்ட அளவைவிட 50 வீதம் வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் 15 ஆயிரத்திற்கு குறையாததும் 25 ஆயிரம் ரூபாவிற்கு அதிகமாகாத தண்டப்பணம் அறவிடப்படும். இந்த தண்டப்பணம் அவ்விடத்திலே அறவிடப்படும் தண்டப்பணத்திற்கு (spot fine) இற்கு மேலதிகமாக அறவிடப்படும்.

04.ரயில்வே கடவைக்கு(Railway Cross மேலாக வாகனத்தை முதல் தடவையாக ஓட்டுதல். 

25 ஆயிரத்திற்கு குறையாததும் 30 ஆயிரத்திற்கு அதிகமாகாத தண்டப்பணம் அறவிடப்படும். அதே குற்றத்தை இரண்டாவது தடவையாக செய்யும் போது 30 ஆயிரத்திற்கு குறையாததும் 40 ஆயிரத்திற்கு இற்கு அதிகமாகாத தண்டப்பணம் அறவிடப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும் . 

அதே குற்றத்தை மூன்றாவது முறையாக செய்யும் போது 40 ஆயிரத்திற்கு குறையாததும் 50 ஆயிரத்திற்கு அதிகமாகாத  தண்டப்பணம் அறவிடப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு தற்காலிகமாக தடை செய்யப்படும்.

05.வாகனம் ஒன்றினை செலுத்தும் போது கையடக்க தொலைபேசியோ அல்லது வேறு ஏதும் சாதனங்களையோ பயன்படுத்தினால் அல்லது கையடக்கத்தொலைபைசியில் பேசினால் முதல் தடவையாக செய்யும் போது  2,500 ரூபாவிற்கு குறையாததும் 7,500 ரூபாவிற்கு அதிகமாகத தண்டப்பணம் அறவிடப்படும். 

அதே குற்றத்தை இரண்டாவது தடவையாக செய்யும் போது 7,500 ரூபாவிற்கு குறையாததும் 15 ஆயிரம் ரூபாவிற்கு அதிகமாகாத தண்டப்பணம் அறவிடப்படும். அதே குற்றத்தை மூன்றாவது முறையாக செய்யும் போது 15 ஆயிரதம் ரூபாவிற்கு குறையாததும் 25 ஆயிரம் ரூபாவிற்கு அதிகமாகாத தண்டப்பணம் அறவிடப்படும். இந்த தண்டப்பணம் அவ்விடத்திலே அறவிடப்படும் தண்டப்பணத்திற்கு (spot fine) இற்கு மேலதிகமாக அறவிடப்படும்.

06. குடி போதையில் வாகனம் ஒன்றினை செலுத்தினால் 25 ஆயிரத்திற்கு குறையாததும் 30 ஆயிரத்திற்கு அதிகமாகாத தண்டப்பணம் அறவிடப்படும். அல்லது 3 மாதம் சிறைத்தண்டனை நியமிக்கப்படும். அல்லது சிறைதண்டனை மற்றும் தண்டப்பணம் ஆகிய இரண்டும் நியமிக்கப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும்.

07.காப்புறுதி சான்றிதல் பத்திரம் இல்லாமல் வாகனத்தை செலுத்தினால் 25 ஆயிரம் ரூபாவிற்கு குறையாததும் 50 ஆயிரம் ரூபாவிற்கு அதிகமாகாத தண்டப்பணம் அறவிடப்படும். அல்லது ஒரு மாதம் சிறைத்தண்டனை நியமிக்கப்படும். அல்லது சிறைதண்டனை மற்றும் தண்டப்பணம் ஆகிய இரண்டும் நியமிக்கப்படும்.

https://www.virakesari.lk/article/60161

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page