‘க்ளினிக்’ செல்லும் நோயாளர்களுக்கு வீடுகளுக்கே மருந்து விநியோகம் – சுகாதார அமைச்சு

நாட்பட்ட நோய்களுக்காக அரசாங்க வைத்திய சாலையில் மருந்துகள் பெற்று வரும் (க்ளினிக்) நோயாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (13.10.2029) முதல் தேவைப் படும் மருந்துகளை தமது வீடுகளுக்கே விநியோகிக்கும் ஏற்பாட்டை மேற் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தற்போது கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஆரம்பிக்கப் படவுள்ள மேற்படி சேவை, விரைவில் நாடு பூராவும் விரிவு படுத்தப் படவுள்ளது.

வைத்தியசாலைகளில் கொவிட் 19 தொடர்பான கெடுபிடிகளின் நிமித்தம் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தொடர்ந்தே  மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நோயாளர்கள் தமக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படுமிடத்து வைத்தியசாலைகளின் அவசரப் பிரிவைத் தொடர்பு கொள்ள முடியும். எனவே, இத்தகைய தருவாயில் எவ்வித அச்சமும் கொள்ளாமல்- தற்போது மேற்கொள்ளப் படும் கொவிட் 19 க்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை வேண்டிக் கொள்கிறது.

SOURCEமடவளநியூஸ் ( அன்சார் எம்.ஷியாம்)
Previous articleமத்திய மலை நாட்டில் கடும் மழை வான்கதவுகள் திறப்பு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Next articleகொழும்பு கொம்பனி தெரு ஆடம்பர தொடமாடி குடியிருப்பொன்றில் ஒருவருக்கு கோரோனா