பெண் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது – காரணம் வௌியானது

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்று பெண் ஊழியர்களுக்கும் மினுவங்கொடை கொவிட் கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த காரணத்தால் தொற்று ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தொற்றாளர்கள் தற்போதைய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

மூன்று பெண் ஊழியர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தேசிய வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை அரங்கம் ஒன்றும் மற்றும் இரண்டு வார்டுகளும் தற்காலிகமாக நேற்று (10) மூடப்பட்டது.

​மேலும், பிரதான தொழிற்சாலைகளில் பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். Ada-Derana

Previous articleவைத்தியசாலைகளுக்கு செல்வதை குறைத்துகொள்ளுங்கள்
Next articleகடும் சுகாதார பாதுகாப்புடன் உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்