மூடப்பட்டது பாணந்துறை வைத்தியசாலையின் ஐ.சி.யு. பிரிவு

பாணந்துரை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் பணிபுரியம் தாதியர் ஒருவரின் மகள் கடந்த 4 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோனையின்போதே அவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கம்பஹாவில் அவரது நண்பர் ஒருவரிடமிருந்து சிறுமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது வைத்தியசாலையின் செவிலியர்கள் மற்றும் வைத்தியர்கள் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Read:  மீண்டும் ரணில் !!