கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை மூடப்போவதில்லை

தற்போதைய கொவிட் தொற்று நிலமையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என இலங்கை முதலீட்டாளர்கள் சபை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்ட தொழிற்சாலையை மாத்திரம் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

குறித்த கைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன் முடிவுகள் வரும் வரையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. Ada-Derana

Previous articleபாரிஸில் 5 பேரை கோரமாகக் கொலை செய்தவரின், தற்போதைய நிலை என்ன..?
Next articleஎந்தவித குற்றமும் செய்யாத ரூமி அப்துல் அஸீஸ் (அபூ மஸ்லமா) நிரபராதியாக ஒன்றரை வருடங்களின் பின் விடுதலை