கட்டுநாயக்கவில் மூன்று தொழிற்சாலைகளுக்கு பூட்டு

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் (FTZ) மூன்று தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குறித்த தொழிற்சாலைகளின் அனைத்து ஊழியர்களையும் தங்களது வீடுகள் மற்றும் விடுதிகளில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள ‘NEXT’ ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீதுவை பகுதியைச் சேர்ந்த 38 வயதான பெண்ணொருவரே கொரோனா தொற்றாளராக இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் ஆவார். 

SOURCEவீரகேசரி பத்திரிகை