அக்குறணைக்கு லங்கா சதொச அவசியம்

அக்குறணையில் ச.தொ.ச இல்லை, மக்கள் அவதி..

அக்குறணை மக்கள் அவசர கால நிலைகளின் போது பொருட்கள் வாங்குவதில் பெரும் சிரமத்தையும், விலைகளை கூட்டி விற்பதையும் தாங்கிக் கொள்கின்றனர்.

நாளுக்கு நாள் பொருட்களை வியாபாரிகள் விலைகளை அதிகரித்து விற்கின்றனர். தற்போது வெங்காயத்தை தங்கம் போன்ற விலையில் விற்கின்றனர்.

அக்குறணை பொதுச்சந்தை கட்டிடத்தில் ச.தொ.ச விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஏன் அக்குறணை பிரதேச சபையும் அதன் தலைவரும் முன் வராது உள்ளனர்?

முதலாளிமார்கள் மட்டும் வாழ்வதற்கும், ஏழை எளிய மக்கள் அவசர நிலைமைகளின் போது திண்டாடுவதற்கும் தானா?

அவசர நிலையின் போது நாடெங்கும் கைகொடுக்கும் சதொச விற்பனை நிலையம் எங்கள் ஊருக்கும் தேவை!

M.S.M. ஸரூக் 077 438 9934

Read:  Akurana Power Cut Time