கொழும்பு – சென். பிரிஜட் கல்லூரி மாணவியின் பெற்றோருக்கு கொரோனா

சென். பிரிஜட் மகளிர் கல்லூரியின் மாணவியொருவரின் பெற்றோருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த பெற்றோர் அரச மருத்துவமனையில் சிக்சை பெற்றுவரும் நிலையில் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளான பெற்றோரின் மகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அதன் முடிவுகள் கிடைக்கப் பெறும் என்று பாடசாலை அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாடசாலையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

எனவே இது குறித்து ஆசியர்களும் ஏனைய பெற்றோரும் வீண் பதற்றமடையத் தேவையில்லை என்றும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். 

வீரகேசரி பத்திரிகை (எம்.மனோசித்ரா)

Read:  மீண்டும் ரணில் !!