சிகிச்சைக்காக கால்கடுக்க காத்திருக்கும் மக்கள் ; பொறுப்பின்றி செயற்படும் வைத்தியசாலை நிர்வாகம் 

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் ஸ்தம்பித்துப்போயுள்ள நிலையில் தமது அன்றாட தேவைகளைக் கூட சரிவர செய்துகொள்ள முடியாத நிவையில் வாழும் மலையக மக்கள் சுகாதார தேவைகளைப் பெற்றுக் கொள்வதிலும் கூட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

ஹட்டன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் கிழமை நாட்களில் வியாழக்கிழமை தோறும் பொதுமக்களுக்கான கிளினிக் நாளாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் 400 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது.

ஆனால் கடந்த வாரத்தின் வியாழக்கிழமை போயா தினமானதால் அன்றையதினம் சிகிச்சைக்கு செல்ல வேண்டிய 400 பேரும் இன்று சமூகமளித்துள்ளனர். 

இதன் காரணமாக தற்போது குறித்த வைத்தியசாலையில் சுமார் 900 முதல் 1000 வரையான நோயாளர்கள் தமக்கான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

இவ்வாறு சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படுகின்றது. அந்த இலக்க முறைப்படியே நோயாளர்கள் அழைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றது. 

முதலில் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் டோக்கன்களை பெற்றுக்கொள்வதற்காக முதல் வரிசையில் நிற்கவேண்டும், பின்னர் அன்றைய சிகிச்சைக்கான சிகிச்சை அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதன்பின்னர் குறித்த நோயாளர்கள் மூன்றாவது வரிசைக்கு சென்ற பின்னரே வைத்தியரின் சிகிச்சைக்கு செல்ல முடியும் என வரிசையில் காத்துக் கிடக்கும் மக்கள் தமது மனக்குறையை கூறுகின்றனர்.

இவர்களில் சிலர் விரைவாக சிகைச்சையைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதற்காக அதிகாலையிலேயே வைத்தியசாலைக்கு சென்று காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலை நிர்வாகம் ஒவ்வொரு நோய்ககும் தனித்தனி தினங்கள் ஒதுக்கப்பட்டு அட்டவணை இடப்பட்டுள்ள போதிலும் அனைத்து விதமான நோயாளர்களும் ஒன்றாக சிகிச்சைக்கு அழைக்கப்படுவதாக வைத்திய சிகிச்சைக்காக வருகைதரும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

தற்போது நாட்டில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக சுகாதாரத் துறையினரால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும் மக்களுக்கு ஒழுங்குமுறையான விதிமுறைகளை வாழங்காது குறித்த வைத்தியசாலை நிர்வாகம் செயற்படுவதாக சிலர் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சிகிச்சைக்காக வரும் மக்கள் சமூக இடைவெளியை பேணாது இருப்பதையும் சுகாதார வழிமுறைகளை பேணாது செயற்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறு பாதிக்கப்படுள்ள தமக்கு உரிய திகாரிகள் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீரகேசரி பத்திரிகை