கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா

கொழும்பில் அமைந்துள்ள காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் (போதனா) சிகிச்சை பெறும் கர்ப்பிணி பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் சுவாசக் கோளாறினால் சிகிச்சைக்காக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கூறுயுள்ளனர்.

எவ்வாறெனினும் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுக்கும் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுக்கும் ஏதேனும் தொடர்புள்ளனவா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகிறது.

SOURCEவீரகேசரி பத்திரிகை
Previous articleமினுவாங்கொட கொரோனா கொத்தணி உருவான விதம்
Next articleஜனாஸா – A.C.M புஹாரி (7ம் கட்டை புஹாரி ஸ்டோர்ஸ்)