மினுவங்கொட ஊழியர்களுக்கான கால அவகசாம் நிறைவடைகிறது !

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் கம்பஹா மாவட்டத்தை  சேர்ந்தவர்கள் அல்லது அங்கு தங்கியிருந்து குறித்த தொழிற்சாலையில் பணிபுரிபவர்களை நேற்று மாலை 6.00 மணி அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்துகொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர்.

இந் நிலையில அக் கால அவகசாமானது இன்று காலை 10.00 மணியுடன் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அறிவித்தலை மீறுவோர், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோராக கருதி, அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று மாலை வரை 275 ஊழியர்கள் நியமிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

01. ஸ்ரீ போதி விளையாட்டரங்கு

02. கனேமுல்ல காவல் நிலையத்திற்கு முன்பாக

03. யக்கஹட்டுவ சந்தி

04. காவல் நிலைய விளையாட்டரங்கு

05. அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம்

06. பல்லேவெல அஞ்சல் காரியாலத்திற்கு அருகில்

07. மீரிகம பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில்

08. வீரகுல காவல் நிலையத்திற்கு முன்பாக

09. மிரிஸ்வத்தை பிரதேச சபைக்கு அருகில்.

10. நெல்லிகஹமுல்ல எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில்

11. வெலிவேரிய காவல் நிலையத்திற்கு முன்பாக

12. வேகே பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு அருகில்

13. தொம்பே காவல் நிலையத்திற்கு முன்பாக

14. பெல்பிட்ட கணிஷ்ட்ட வித்தியாலயத்திற்கு அருகில்

வீரகேசரி பத்திரிகை

Read:  மீண்டும் ரணில் !!