சுகாதார அமைச்சு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையை அடுத்து புதிய கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு விதித்துள்ளது.

அதற்கமைய சமூகத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடுவதனை கட்டுப்படுத்துவதற்கு தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், கெசினா, இரவு நேர கேளிக்கை விடுதி, பந்தயம் கட்டும் நிலையங்கள், மசாஜ் நிலையங்கள், வாடகைக்கு அறைகள் வழங்கும் இடங்கள், மதுபானங்கள் வழங்கும் இடங்கள் ஆகியவற்றை மூடி வைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் திறந்து வைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், ஒரு நேரத்தில் 50 பேருக்கு மாத்திரமே ஆசனம் பெற முடியும்.

உடற் பயிற்சி நிலையங்கள், நீச்சல் குளங்கள், சிறுவர் பூங்காவில் ஒரே நேரத்தில் நூற்றுக்கு 50 வீதமானோர் மாத்திரமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாடகை அறைகளை நடத்தி செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், புதியவர்களை அனுமதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

திருமண நிகழ்வு நடத்தும் போது அது தொடர்பில் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்து விட்டு இட வசதியில் 50 வீதமானோரே கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read:  மீண்டும் ரணில் !!