வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை

எதிர்வரும் 08 ஆம் மற்றும் 09 ஆம் திகதிகளில் கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் துணை தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கையில் ஒன்றை வெளியிட்டு வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் மரணங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஏற்றுமதி சுற்றறிக்கை தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள 011-233 8836 மற்றும் 011-2335942 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

SOURCEAda Derana
Previous articleசகல பள்ளிவாசல்களினதும் உடனடிக் கவனத்திற்கு, பேணப்பட அவசர கொவிட்- 19 கட்டுப்பாடுகள்
Next articleபுகையிரத பயணிகளுக்கு விஷேட அறிவித்தல்